சேரம்பாடியில் அரசு தேயிலை தோட்டத்தில் காட்டு யானை அட்டகாசம்
சேரம்பாடியில் அரசு தேயிலை தோட்டத்தில் காட்டு யானை அட்டகாசம்
பந்தலூர்
பந்தலூர் அருகே சேரம்பாடி அரசுதேயிலைதோட்டம் ரேஞ்ச் எண் 1,2,3,4, ஆகிய பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். தினமும் காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளையும் தாக்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு எளியாஸ்கடை பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டது.
இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர்கள் கிருபானந்தகுமார், குணசேகரன் மற்றும் வனத்துறையினரும் வேட்டைதடுப்பு காவலர்களும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமடைந்த காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியது. மேலும் வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதேபோல் சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 4 நாயக்கன் சோலை ஒட்டியுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பை ஒற்றை யானை முற்றுகையிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் தொழிலாளர்கள் பீதிஅடைந்தனர் சம்பவம் குறித்து அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்டியடித்தனர்.