பயிா்களை சேதப்படுத்திய காட்டுயானை
தோட்டங்களுக்குள் புகுந்து காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியது.
திண்டுக்கல்
பெரும்பாறை அருகே மல்லிகைப்பாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. அவை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள காபி தோட்டங்களுக்குள் புகுந்தது. பின்னர் அங்கு பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு ஆகிய பயிர்களை தின்று நாசப்பத்தியது. இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டிருந்த யானை நேற்று காலை வனப்பகுதிக்குள் சென்றது. எனவே காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story