வனத்துறையின் கண்காணிப்பில் அரிக்கொம்பன் காட்டு யானை


வனத்துறையின் கண்காணிப்பில் அரிக்கொம்பன் காட்டு யானை
x
தினத்தந்தி 6 May 2023 2:15 AM IST (Updated: 6 May 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் காட்டு யானை கண்காணிப்பில் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்ததுடன், 20-க்கும் மேற்பட்டோரை அந்த யானை காவு வாங்கியுள்ளது. இதையடுத்து கேரள வனத்துறையினர் அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையாக திகழும் பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட தேக்கடி மேதகானம் வனப்பகுதியில் விட்டனர்.

இந்தநிலையில் அந்த காட்டு யானை அங்கிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு வந்தது. மேலும் நேற்று முன்தினம் அதிகாலை இரவங்கலாறு பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு அரிக்கொம்பன் காட்டு யானை வந்தது. அப்போது குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, அங்கிருந்த அரிசி மூட்டையை எடுத்து தின்றது. பின்னர் அங்கிருந்து காட்டு யானை சென்றுவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹைவேவிஸ் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே அரிக்கொம்பன் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே வனத்துறை உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர் வனத்துறையினர் கூறுகையில், அரிக்கொம்பன் காட்டு யானை ஹைவேவிஸ் மலைப்பகுதியில் ெதாடர்ந்து முகாமிட்டுள்ளது. தற்போது அந்த யானை அப்பர் மணலாறு பகுதியில் உள்ளது. பொதுமக்கள் அத்துமீறி வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். அந்த யானை வனத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. மேலும் அதன் அடுத்தக்கட்ட நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.


Next Story