கோபி அருகே ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் மீது போக்சோ வழக்கு


கோபி அருகே ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் மீது போக்சோ  வழக்கு
x

கோபி அருகே ஆசை வார்த்தைக்கூறி சிறுமிைய திருமணம் செய்த டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே ஆசை வார்த்தைக்கூறி சிறுமிைய திருமணம் செய்த டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிரைவர்

கோபி அருகே உள்ள தட்டார்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவருடைய மகன் லோகநாதன் (வயது 29). வேன் டிரைவர். இவர் கோபி பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக ஆனார். இதைத்தொடர்ந்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கோபி பகுதியில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு திருமண வயது பூர்த்தியாகவில்லை என தெரியவந்தது.

போக்சோவில் வழக்கு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் பாலாஜி விரைந்து சென்று அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், 'அந்த சிறுமிக்கு 17 வயது என்பதும், ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை லோகநாதன் கடத்தி சென்று திருமணம் செய்ததும்,' தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் பாலாஜி அளித்த புகாரின் பேரில் லோகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கோபி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story