கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை


கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 Jun 2023 3:35 AM IST (Updated: 29 Jun 2023 4:38 PM IST)
t-max-icont-min-icon

கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சேலம் பள்ளப்பட்டி கிழக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம்ஸ் கணேஷ். இவருடைய மனைவி நித்யபிரியா (வயது 35). இவர் 5 ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே, கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நித்யபிரியா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் தற்ெகாலை செய்து கொண்ட நித்யபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story