சாலை விபத்தில் பெண் பலி
சாலை விபத்தில் பெண் பலியானார்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகஜீவன் விவசாயி. இவரது மனைவி கோமதி. இவர்கள் நேற்று முன்தினம் முத்துப்பேட்டையில் இருந்து மதுக்கூரை அடுத்த விக்கிரமத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். சிரமேல்குடி ரோடு இளங்காடு அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தரியாத வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், பலத்த காயம் அடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். படுகாயம் அடைந்த ஜெகஜீவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது மாதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது?, அதனை ஓட்டிச் சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.