கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நகை பறிப்பில் ஈடுபட்டது பெண்


கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நகை பறிப்பில் ஈடுபட்டது பெண்
x

சேலத்தில் வீட்டில் இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமணிந்து நகையை பறித்து சென்றது பெண் என்பது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

சேலம்:-

சேலத்தில் வீட்டில் இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமணிந்து நகையை பறித்து சென்றது பெண் என்பது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நகை பறிப்பு

சேலம் அஸ்தம்பட்டி டி.வி.எஸ். காலனியை சேர்ந்தவர் பொன்ராணி (வயது 69). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், கடந்த 5-ந் தேதி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த ஒருவர், பொன்ராணிக்கு சாக்லெட் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் சாக்லெட்டை வாங்கிய மூதாட்டி, வேறு யாரும் வரவில்லையா? என்று கேட்டுள்ளார். அதன்பிறகு மற்றொரு சாக்லெட்டை கொடுத்துவிட்டு பொன்ராணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியை அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்ராணியிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஒருவர் தப்பி ஓடும் காட்சி பதிவாகியிருந்தது. அதாவது, நகையை பறித்துக்கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற வேடம் அணிந்திருந்தது ஒரு பெண் என்பது அந்த கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது.

வீட்டில் இருந்த பொன்ராணிக்கு நன்கு அறிமுகம் ஆன பெண் தான் நகையை பறித்து சென்றிருக்க வேண்டும் எனவும், இதனால் அவர் தனியாக இருந்தபோது நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் உருவம் பதிவு

இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த பெண்ணின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள் எந்தெந்த கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த உடையை வாங்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை கேள்விப்படாத வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் பெண் வந்து, நகையை பறித்து சென்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story