லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் காயம் அடைந்த ெபண் சிகிச்ைச பலனின்றி சாவு
லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் காயம் அடைந்த ெபண் சிகிச்ைச பலனின்றி இறந்தார்.
காவேரிப்பாக்கம்
லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் காயம் அடைந்த ெபண் சிகிச்ைச பலனின்றி இறந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரியபெரும்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயபாபு (வயது 41), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 8-ந் தேதி மனைவி அனுஷ்யா (38), மகன் முகேஷ் (13), மகள் ஷோபியாவுடன் (6) பனப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான, பொன்னியம்மன்பட்டறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் நின்றுகொண்டு இருந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விஜயபாபு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மனைவி மற்றும் 2 குழந்தைகளும் ஆபத்தான நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக அனுஷ்யா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும், ஷோபியா சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். இதில் அனுஷ்யா நேற்று இறந்து விட்டார். 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.