கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் பெண் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

வீடு புகுந்து தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் பெண் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் கேனுடன்...

ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு சர்ச் தெருவை சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி கவுசல்யா (வயது 40). இவர் நேற்று தன்னுடைய 12 வயது மகனுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவரது கையில் பெட்ரோல் கேன் இருந்தது. பின்னர் பெட்ரோலை தனது உடலில் ஊற்ற அந்த பெண் முயன்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு கவுசல்யாவிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்தனர். பின்னர் கவுசல்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

சரமாரி தாக்குதல்

எனது வீட்டிற்குள் சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் புகுந்து சரமாரியாக என்னை தாக்கியது. மேலும் பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் அந்த கும்பல் சேதப்படுத்தியது. இதுதொடர்பாக ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தேன். அப்போது போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வைத்தனர். மோட்டார் சைக்கிளையும் சரி செய்து தருவதாக கூறினர். ஆனால் தற்போது வரை மோட்டார் சைக்கிள் சரி செய்து தரப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கும்பல் மீண்டும் என்னையும், என் மகனையும் தாக்கியது. கொலை வெறி தாக்குதல் நடத்தி மரண பயத்தை ஏற்படுத்தி விட்டார்கள். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து விவரங்களை கேட்டறிந்த போலீசார் கவுசல்யா புகார் குறித்து ஈத்தாமொழி போலீசில் தகவல் தெரிவித்தனர். கும்பல் தாக்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதோடு கவுசல்யாவையும், அவருடைய மகனையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றதாக கவுசல்யா மீது நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்தனர்.


Next Story