காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை


காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
x

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்

கரூர்

கரூர் வடிவேல் நகர் அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் சந்தியா (வயது 24). இவரும். குணா என்பவரும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சந்தியா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story