அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி


அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி
x

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தை சேர்ந்தவர் வேணியம்மாள் (வயது 65), திருமணம் ஆகாதவர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை பார்த்துக்கொண்டு அங்கேயே வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலையில் வேணியம்மாள் தனது வாழைத்தோட்டத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

இதை பார்த்த சிறுவர்கள் கிராமத்திற்கு சென்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் சென்று பார்த்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, சாலமன், ஏட்டு ராமு உள்ளிட்ட போலீசார் சென்று விசாரணை நடத்தி, வேணியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Next Story