ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயரை போலீசிடம் சிக்க வைத்த பெண்


ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயரை போலீசிடம் சிக்க வைத்த பெண்
x

மின்கம்பம் மாற்றுவதற்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயரை, லஞ்ச ஒழிப்பு போலீசிடம் பெண் ஒருவர் சிக்க வைத்தார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

மின்கம்பம் மாற்றுவதற்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயரை, லஞ்ச ஒழிப்பு போலீசிடம் பெண் ஒருவர் சிக்க வைத்தார்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி அம்மா நகரை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 50). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இவர் தனது இடத்தின் அருகே இருந்த மின்கம்பத்தை மாற்றக்கோரி பாளையம்பட்டி துணை மின் நிலையத்தில் உதவி என்ஜினீயர் பசுவநாதனிடம் மனு அளித்தார்.

அப்போது மின்கம்பத்தை மாற்ற பசுவநாதன், வீரம்மாளிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத வீரம்மாள் இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கையும் களவுமாக கைது

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வீரம்மாள் நேற்று பாளையம்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்தில் பசுவநாதனிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி என்ஜினீயர் பசுவநாதனை கையும், களவுமாக கைது செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், பசுவநாதனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story