வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து நகை கொள்ளை


வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து நகை கொள்ளை
x

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு பூவதேவன் காடு பகுதியை சேர்ந்தவர் வனிதகுமாரி(வயது 49). இவரது கணவர் பாண்டியன். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். பாண்டியன் தஞ்சாவூரில் தனியாக வசித்து வருகிறார். வனிதகுமாரி மருதூர் தெற்கில் புதிதாக வீடு கட்டி அதில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் வனிதகுமாரி இட்லி மாவு அரைத்துக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென வனிதகுமாரியின் வீட்டுக்குள் புகுந்தார்.

கழுத்தை அறுத்துக் கொள்ளை

இதை சற்றும் எதிர்பார்க்காத வனிதகுமாரியின் கழுத்து மற்றும் காதுகளை அறுத்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்டார்.

மர்ம நபர் கழுத்து மற்றும் காதுகளை அறுத்ததால் வேதனை தாங்காமல் வனிதகுமாரி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த வனிதகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு பெண்ணின் கழுத்து மற்றும் காதுகளை அறுத்து விட்டு நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story