கிரிவலம் சென்ற பெண் லோடு ஆட்டோ மோதி பலி


கிரிவலம் சென்ற பெண் லோடு ஆட்டோ மோதி பலி
x
தினத்தந்தி 9 Dec 2022 7:19 PM IST (Updated: 10 Dec 2022 5:03 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண் லோடு ஆட்டோ மோதி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேகா (வயது 47).

இந்த நிலையில் நேற்று பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக சோமசுந்தரம் தனது மனைவி, மகன் மற்றும் மைத்துனர் மகள் ஆகியோருடன் காரில் திருவண்ணாமலைக்கு வந்தார்.

அவர்கள் காரை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் நிறுத்திவிட்டு கிரிவலம் சென்றனர். ரமணாசிரமம் அருகில் உள்ள மணக்குள விநாயகர் சந்திப்பு அருகே அவர்கள் நடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ ரேகா மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அந்த லோடு ஆட்டோ அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ரேகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story