ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் பலி


ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட  பெண் பலி
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

வேப்பூர்,

வேப்பூர் அருகே நகர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி குமாரி (வயது 31). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள கோமுகி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றார். அங்கு அவர், ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது குமாரி எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். ஆற்றில் அதிகளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் அவர், நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை ஆற்று நீர் ½ கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளது. இதில் நீரில் மூழ்கி அவர் இறந்தார். இதையடுத்து அவரது உடல் நல்லூர் எல்லை ஆற்றங்கரையில் ஒதுங்கியது.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலி்ன் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குமாரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story