திருப்பூர் அருகே ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சொத்துக்களை அபகரிப்பதற்காக 3-வது கணவரை விஷஊசி போட்டு கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர் மேலும் ஒரு கோடீஸ்வரரை மயக்கி குடும்பம் நடத்தியதும் அம்பலமாகியுள்ளது.

x

திருப்பூர்

பெருமாநல்லூர்

திருப்பூர் அருகே ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சொத்துக்களை அபகரிப்பதற்காக 3-வது கணவரை விஷஊசி போட்டு கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர் மேலும் ஒரு கோடீஸ்வரரை மயக்கி குடும்பம் நடத்தியதும் அம்பலமாகியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

3-வது திருமணம்

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52). விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார்.

அதன் பின்னர் அவர்கள் குறிச்சிதோட்டத்துப்பாளையத்தில் வசித்து வந்தனர். இவர்களுடன் சுப்பிரமணியின் தாயாரும் வசித்து வந்தார். இந்த நிலையில் தேவிக்கும், சுப்பிரமணியின் தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சுப்பிரமணியின் தாயார் கோபித்துக்கொண்டு அவரது அக்காள் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இதைத் தொடர்ந்து தேவி, தனது கணவரிடம் "நாம் திண்டுக்கல் சென்று அங்கு சந்தோஷமாக வாழலாம்" என கூறியுள்ளார். ஆனால் அவா் செல்ல மறுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி சுப்பிரமணி காய்ச்சலால் அவதிப்பட்டார்.

அப்போது அவரது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருடைய ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்தனா். அப்போது நைசாக மருத்துவமனையில் இருந்து தப்பி தேவி தலைமறைவானார்.

பரபரப்பு வாக்குமூலம்

இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து தேவியை வலைவீசி தேடி வந்தனர். அப்போது தேவி நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேவியை கைது செய்து அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், தேவி போலீசில் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில்தான் விவசாயி சுப்பிரமணிக்கு 50 வயது ஆகியும் திருமணமாகவில்லை என்றும், அவருக்கு சொந்தமாக சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் இருப்பதும் புரோக்கர் மூலம் தெரியவந்தது. எனவே சுப்பிரமணியை 3-வதாக திருமணம் செய்தேன்.

கொலை முயற்சி

இதற்கிடையில், நாமக்கல்லைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து இருப்பதும், அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பெண் பார்த்து வந்ததும் தெரியவந்தது. எனவே அவரை திருமணம் செய்தால் சுப போகமாக வாழலாம் என்று முடிவு செய்தேன்.

அதற்கு முன்பு சுப்பிரமணியை தீர்த்து கட்டினால் அவருடைய சொத்துகளும் மனைவி என்ற பந்தத்தில் நமக்கு கிடைக்கும் என்ற ஆசை வந்தது. எனவே சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்தேன். ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.

அதன் பின்னர் போலீசார் பிடித்து விடுவார்கள் என பயந்து நாமக்கல்லுக்கு தப்பி சென்று 4-வதாக அந்த கோடீஸ்வரரை 27-ந் தேதி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் போலீசில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு தேவி வாக்குமூலம் ெகாடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னணியில் இருப்பது யார்?

ஆடம்பர வாழ்க்கைக்காக தேவி இது போன்று பல ஆண்களை மயக்கி திருமணம் செய்திருக்கலாம் என போலீசாா் தெரிவித்தனர். எனவே தேவியால் மட்டும் இது போன்ற செயலில் ஈடுபட முடியாது. அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? விஷ ஊசி வாங்கி கொடுத்தது யார்? வசதியானவர்களையும், தொழில் அதிபர்களையும் கண்டறிந்து அவர்களிடம் தேவியை பழக வைத்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story