கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத மகளிர் சுகாதார வளாகம்


கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத மகளிர் சுகாதார வளாகம்
x

கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத மகளிர் சுகாதார வளாகம் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கட்டிடத்தில் உள் பகுதி சில இடங்களில் சேதப்படுத்தியும், குப்பைகள் கொட்டியும் உள்ளனர். கட்டிடத்தின் உள் பகுதியில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை அகற்றி சேதமடைந்த கட்டிடத்தின் உள் பகுதிகளை சீரமைப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Next Story