பள்ளியில் பிடிபட்ட மரநாய்


பள்ளியில் பிடிபட்ட மரநாய்
x

சிவரக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிக்குள் மரநாய் புகுந்தது.

மதுரை

பேரையூர்,

திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கூட சுகாதார வளாகத்தில் வனவிலங்கான மரநாய் ஒன்று புகுந்தது.. இது குறித்த தகவல் சாப்டூர் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் செல்லமணி தலைமையில் வனவர் ஜெய்சங்கர் மற்றும் வனத்துறையினர் பள்ளிக்கு சென்று இரும்பு கூண்டு வைத்து மரநாயை பிடித்தனர்.பின்னர் பிடிபட்ட மரநாயை சாப்டூர் பீட் நம்பர் 8-ல் உள்ள கேணி பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.


Next Story