பன்றியை பிடிக்க வைத்திருந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி பலி
பன்றியை பிடிக்க வைத்திருந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி பலியானார்.
திருச்சி
சமயபுரம் அருகே உள்ள மகிழம்பாடி புள்ளம்பாடி தெருவை சேர்ந்தவர் ஜெயா ஆரோக்கியராஜ் (வயது 45).இவர் தச்சு தொழில் செய்து வந்தார். நேற்று காலையில் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நடந்து சென்றார். அப்போது தோட்டத்தில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில், ஜெயா ஆரோக்கியராஜ் தெரியாமல் மிதித்துள்ளார். இதில் அவரது உடல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story