மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 30 Aug 2023 2:30 AM IST (Updated: 30 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டியில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

தேனி

தேவதானப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்தவர் பிச்சை (வயது 57). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிபட்டியை சேர்ந்த கருப்பசாமி (33) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் வந்ததும், பிச்சை மீது எதிர்பாராதவிதமாக கருப்பசாமி மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த பிச்சையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுதொடர்பாக கருப்பசாமி மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story