மண்டபத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி படுகாயம்


மண்டபத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி படுகாயம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மண்டபத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

திருவண்ணாமலை

சேலம் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 40), கூலி தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் கடந்த ஒரு வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள அருணையோகிஸ்வரர் மண்டபத்தின் மேல் ஏறினார்.

அப்போது அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் கால் முறிவு மற்றும் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ராஜா கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்துள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து அவர் ஏன் மண்டபத்தின் ஏறினார், தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story