பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே பதனீர் இறக்குவதற்கு பனைமரத்தில் ஏறிக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே பதனீர் இறக்குவதற்கு பனைமரத்தில் ஏறிக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பனைஏறும் தொழிலாளி

எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் முருகன் (வயது 50). பனையேறும் தொழிலாளி. இவர் தனது தோட்டத்தில் உள்ள பனைமரத்தில் பதனீர் இறக்குவதற்காக நேற்று அதிகாலையில் சென்றுள்ளார். பின்னர் பதனீர் இறக்குவதற்காக அவர் ஒரு பனைமரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி பனைமரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சாவு

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேேய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாசாா்பட்டி போலீசார் அந்த பகுதிக்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி எட்டயபுரம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முருகனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

பதனீர் இறக்க சென்ற தொழிலாளி பனைமரத்திலிருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை


Next Story