சென்னையை சேர்ந்த தொழிலாளி திடீர் சாவு


சென்னையை சேர்ந்த தொழிலாளி திடீர் சாவு
x

வேலூரில் சென்னையை சேர்ந்த தொழிலாளி திடீரென இறந்தார்.

வேலூர்

சென்னை கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43), தொழிலாளி. இவர் நேற்று அவருடைய நண்பர் சத்யராஜ் என்பவருடன் வேலை தொடர்பாக வேலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு வந்தனர்.

அப்போது திடீரென பெருமாளுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்து கீழே விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சத்யராஜ் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story