கிணற்றுக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி


கிணற்றுக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி
x

நத்தம் அருகே காணாமல் போன தொழிலாளி கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார்.

திண்டுக்கல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்களப்பேட்டையை சேர்ந்தவர் கோபு (வயது 36). இவர், மதுரையில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 14-ந்தேதி இவர், தனது குடும்பத்தினருடன் மதுரையில் இருந்து நத்தம் வழியாக காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நத்தத்தை அடுத்த பரளிபுதூர் சோதனைச்சாவடி அருகே கார் நின்றது. அப்போது காரில் இருந்து இறங்கிய கோபு திடீரென காணாமல் போய் விட்டார்.

இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நத்தம் அருகே தனியார் தோட்டத்து கிணற்றில் கோபு பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக நத்தம் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.தண்ணீர் இல்லாத அந்த கிணற்றுக்குள் இருந்து, கோபுவின் உடலை கயிறு கட்டி தீயணைப்பு படையினர் மீட்டனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக கோபுவின் உடலை, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் கோபுவின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story