சாலையோரத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி
சாலையோரத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
திண்டுக்கல்
பழனி ஆர்.எப்.ரோடு தேவஸ்தான விடுதி முன்பு நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். விசாரணையில், அவர் கீரனூர் அருகே மேல்கரைப்பட்டியை சேர்ந்த தச்சு தொழிலாளி சண்முகம் (வயது 55) என்பது தெரியவந்தது. உடல்நிலை பாதிக்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறி உள்ளார். அப்போது உடல்நிலை மோசமடைந்து சாலையோரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story