திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவி, மகனுடன் தொழிலாளி தர்ணா


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவி, மகனுடன் தொழிலாளி தர்ணா
x
தினத்தந்தி 24 Jun 2023 2:30 AM IST (Updated: 24 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவி, மகனுடன் தொழிலாளி தர்ணாவில் ஈடுபட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று 4 பேர் கோரிக்கை மனுவுடன் வந்தனர். அப்போது அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நத்தம் தாலுகா மூங்கில்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயன் (வயது 48), அவருடைய மனைவி அழகம்மாள், மகன் சின்னக்கருப்பன், உறவினர் சத்யா என்பது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் விஜயனுக்கு சொந்தமான நிலத்துக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து வேலி அமைத்ததாகவும், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் வந்து தர்ணாவில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் பேசிய போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க வேண்டும். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதைவிடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தனர். பின்னர் அவர்களை கலெக்டர் அலுவலகத்தில் சென்று மனு கொடுக்கும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story