உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீரில் இறங்கி கால்வாய்களை சுத்தம் செய்யும் தொழிலாளி
ஆரணி நகராட்சியில் உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீரில் இறங்கி கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளி ஈடுபட்டது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி
ஆரணி நகராட்சியில் பாதுகாப்புஉபகரணம் இல்லாமல் கழிவுநீரில் இறங்கி கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளி ஈடுபட்டார்.
ஆரணி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 1-வது முதல் 18-வது வார்டு வரை தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வெறும் குப்பைகளை மட்டுமே வீடு வீடாக மக்களிடம் வாங்கப்பட்டு வருவதால் கால்வாய்களில் தூர்வாரப்படாத நிலையில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடும் நிலை அவ்வப்போது இருந்து வருகிறது.
கால்வாய்களில் இறங்கி வேலைர செய்ய நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதாகவும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நகரில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் ஒப்பந்த தூய்மை பணியாளர் ஒருவர் கழிவுநீரில் இறங்கி பாதுகாப்பு கவசம் இல்லாமல் வெறும் கைகளாலேயே அடைப்புகளை எடுக்கும் பணி மேற்கொண்டார். இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பரவிய வருகிறது.
ஆரணி நகராட்சியின் இந்த செயல் சமூக நலனில் அக்கறையுள்ளவர்களை வேதனையில் ஆழ்த்தியது. எனவே சமூக அக்கறையுடன் நகராட்சி நிர்வாகம் அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.