நண்பனின் மனைவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளி தற்கொலை


நண்பனின் மனைவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளி தற்கொலை
x

அருமனை அருகே நண்பனின் மனைவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

அருமனை:

அருமனை அருகே நண்பனின் மனைவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மரம் வெட்டும் தொழிலாளி

அருமனை அருகே அண்டுகோடு நெடுவிளையை சேர்ந்தவர் ஜெனிஸ் குமார் (வயது38), மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் விழுந்து இறந்தார். நண்பருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவர்களுக்கு ஜெனிஸ் குமார் ஆதரவாக இருந்து வந்தார். அத்துடன் ஒரு வீட்டில் அந்த பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தார்.

ஜெனிஸ்குமாருக்கு மது பழக்கம் உண்டு. இதனால், அவருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த பெண் குழந்தைகளுடன் அருகில் உள்ள கடைக்கு சென்றார். சிறிது நேரம் கடந்து வீட்டுக்கு வந்த போது கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ஜெனிஸ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story