பழனி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பழனி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்
பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்து மரத்தில் ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story