ஆக்கி நடுவர்களுக்கான பயிலரங்கம்
பாளையங்கோட்டையில் ஆக்கி நடுவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.
திருநெல்வேலி
ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் ஆக்கி போட்டி நடுவர்களுக்கான பயிலரங்கம் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி உள் விளையாட்டு அரங்கத்தில் 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் பயிலரங்கத்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். தலைவர் சேவியர் ஜோதிசற்குணம் நடுவர்களுக்கு போட்டிகளில் எப்படி நடுவராக செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்தார்.
பயிற்சி நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. பயிற்சி முடித்த நடுவர்களுக்கு சான்றிதழ்களையும், விளையாட்டு உபகரணங்களையும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் செயலாளர் பீர்அலி, பொருளாளர் டாக்டர் மாரிக்கண்ணன், ஹமர்நிஷா, சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story