தீயில் கருகி இளம்பெண் சாவு
செஞ்சியில் தீயில் கருகி இளம்பெண் சாவு இறந்தாா்.
விழுப்புரம்
செஞ்சி:
செஞ்சி நரசிங்கராயன்பேட்டையை சேர்ந்தவர் பெருமாள் மகன் மஞ்சுநாதன். இவரது மனைவி காவியா(வயது 25). இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காவியா வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்தது. இந்த தீ அவரது உடல் முழுவதும் பரவி எரிந்தது. வலியால் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காவியாவை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவியாவின் தந்தை கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story