விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த 10 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த 10 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த 10 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கெசியால்(வயது 21). வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் காதலித்து கடந்த 10 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தற்கொலை

இதில் மனமுடைந்த கெசியால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று கெசியாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திருமணம் ஆன 10 மாதத்திலேயே புதுப்பெண் இறந்ததால் விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனியும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story