காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

குன்னம் அருகே உள்ள புதுவேட்டைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் தேவராஜ் (வயது 28). இவர் புதுவேட்டைக்குடி அருகே உள்ள காடூர் கிராமத்தை சேர்ந்த துரைராஜ்- முத்துலட்சுமியின் மகளான சத்யாவை (23) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் சஞ்சீவ் தேவ் என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் தேவராஜுக்கும், சத்யாவுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தை சஞ்சீவ் தேவ் பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது சத்யாவின் பெற்றோர் குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மனமுடைந்த சத்யா நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்யாவின் தாயார் முத்துலட்சுமி குன்னம் போலீசில் தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்தார். அதன் பேரில் குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story