காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த கலவைபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மகள் ஆனந்தி. இவரும், சென்னை மந்தவெளி புகுதியை சேர்ந்த ஆதி கேசவன் மகன் பூமிநாதனும் இரண்டு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனந்திக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. பூமிநாதன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இரண்டு மாதத்திற்கு முன்பு கலவைப் புத்தூர் கிராமத்திற்கு வந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனந்தியின் தந்தை ஜெகநாதன் கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கலவை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி, ஆனத்தியின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story