துறவறம் ஏற்கும் ஜெயின் சமூக இளம்பெண், சிறுவன் ஊர்வலம்


வேலூரில் துறவறம் ஏற்கும் ஜெயின் சமூக இளம்பெண், சிறுவன் ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர்

வேலூரில் வசிக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிறுவன் முமுஷ் சமரத் குலேச்சா மற்றும் திருப்பத்தூர் நகரத்தை சேர்ந்த இளம்பெண் முமுஷ் சுஷ்மா கவார்டு ஆகியோர் வருகிற 10-ந் தேதி திருப்பத்தூரில் நடக்கும் நிகழ்ச்சியில் துறவறம் ஏற்க உள்ளனர். இதையொட்டி அவர்கள் இருவரும் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்ச்சி வேலூரில் நடந்தது. பி.எஸ்.எஸ்.கோவில் தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கே.வி.எஸ். செட்டித்தெரு, காந்திரோடு, மெயின்பஜார், மண்டித்தெரு வழியாக சென்று காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெயின் பவனில் நிறைவடைந்தது. துறவறம் ஏற்ற இளம்பெண், சிறுவன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.

இதில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, கச்சாதிபதி ஆச்சாரியா குருபகவன் ஜின்மணி பிரபசுரிஜி, ஜெயின் சங்கத்தலைவர் ஸ்ரீபால் குலேச்சா, செயலாளர் ருக்ஜி ராஜேஷ்குமார் ஜெயின், பொறுப்பாளர்கள் சுபாஷ், மகாவீர், தீரஜ், சுரேஷ் ஜெயின் மற்றும் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு திருத்தங்கர் பகவான் பாடல்களை பாடியபடி சென்றனர்.


Next Story