தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

கள்ளிமந்தயம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

திண்டுக்கல்

கள்ளிமந்தயம் அருகே அம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). நேற்று இவர், அம்மாபட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தாராபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

தாராபுரம் பைபாஸ் ரோட்டில் தும்மச்சிபாளையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கள்ளிமந்தயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story