Normal
பஸ்சில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் படுகாயம்
பஸ்சில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்
ராமநாதபுரம்
கமுதி
கமுதியில் இருந்து பெருநாழிக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றபோது, பஸ்சில் ஏறிய குண்டுகுளம் என்ற கிராமத்தை சேர்ந்த நம்புவேல்(29) என்ற வாலிபர் குடிபோதையில் படிக்கட்டில் நின்று கொண்டு வந்துள்ளார். பஸ் கண்டக்டர் கருப்பையா, படிக்கட்டில் இருந்து மேலே ஏறி வரச்சொல்லியும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்த நம்புவேல், பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே வளைவில் பஸ் சென்றபோது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த வாலிபர் நம்புவேல் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பஸ் டிரைவர் முனியசாமி கமுதி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story