தின்னப்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
தின்னப்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
சேலம்
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த ரெட்டியூர் சர்தார் பாலம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் செல்ல கிருஷ்ணன் (வயது 25). இவர் கடந்த 8 மாதமாக மனநிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு 7 மணி அளவில் சர்தார் பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே செல்ல கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story