சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிய வாலிபர் மீட்பு
சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிய வாலிபர் மீட்கப்பட்டார்.
தேனி
சின்னமனூர் அகமுடையார் தெருவை சேர்ந்த முருகன் மகன் நந்தகோபால் (வயது 22). இவர் இன்று தனது நண்பர்களுடன் எல்லப்பட்டி முல்லைப்பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு ஆற்றில் அவர்கள் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நந்தகோபால் மட்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
மேலும் அங்குள்ள தடுப்பணை அருகில் பாறையை பிடித்தபடி உயிருக்கு போராடினார். இதுகுறித்து அவரது நண்பர்கள் சின்னமனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாணிக்கம் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தீயணைப்பு படைவீரர்கள் கயிறு மூலம் ஆற்றில் இறங்கி நந்தகோபாலை பத்திரமாக மீட்டனர்.
Related Tags :
Next Story