Normal
மீன் பிடிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி சாவு
பாளையங்கோட்டையில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி இறந்தார்.
திருநெல்வேலி
நெல்லை:
பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் முத்துகுட்டி (வயது 25). இவர் மின்சார வாரியத்தில் தொகுப்பூதியத்தில் ஒப்பந்தப்பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று தனது நண்பருடன் ராஜகோபாலபுரம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது டியூப்பில் காற்றடைத்து அதில் ஏறி சென்றார். ஆழமான பகுதிக்கு சென்றபோது டியூப்பில் இருந்து தவறி விழுந்து குளத்தில் மூழ்கி முத்துக்குட்டி பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் விரைந்து சென்று குளத்தில் மூழ்கிய முத்துக்குட்டி உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story