இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்


இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்
x

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய காதலன் மற்றும் அவரது நண்பர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

காட்பாடி

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய காதலன் மற்றும் அவரது நண்பர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம்

காட்பாடி அருகே உள்ள மேல்பாடியை சேர்ந்தவர் ஓம்கணேஷ். இவர் 17 வயது இளம்பெண்ணை கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் ஓம்கணேஷ், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது, ஓம்கணேஷின் நண்பர் கருணா அதனை வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது இளம்பெண் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

வழக்குப்பதிவு

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, தனது காதலனிடம் இளம் பெண் வற்புறுத்தி வந்தார். ஆனால் திருமணம் செய்ய மறுத்த ஓம்கணேஷ், திருமணம் செய்க்கூறி வற்புறுத்தினால் பலாத்காரம் செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார், ஓம் கணேஷ் மற்றும் வீடியோ எடுத்த அவரது நண்பர் கருணா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story