வீடு புகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்தி 14 பவுன் நகை கொள்ளை


வீடு புகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்தி 14 பவுன் நகை கொள்ளை
x

குலசேகரன்பட்டினம் அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்தி 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்தி 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

மீனவர்

குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பதுவை நகரை சேர்ந்தவர் ருபிஸ்டன். மீனவர். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்மைலா (வயது 36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஸ்மைலா கல்லாமொழியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பெண்கள்அழகு நிலையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு ருபிஸ்டன் மீன்பிடிக்க கடலுக்கு சென்று உள்ளார்.

நகைகள், பணம் கொள்ளை

காலை 5.20 மணிக்கு திடீரென்று மர்மநபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளார். வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஸ்மைலாவின் முகத்திலும், தொடையிலும் மர்மநபர் கத்தியால் குத்தியுள்ளார். அவரிடம் இருந்த தாலி சங்கிலியை பறித்து கொண்டதுடன், பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, வளையல் போன்ற 15¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.3 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்ட மர்மநபர் அந்த வீட்டிலிருந்து ஓடியுள்ளார். ரத்தவெள்ளத்தில் படுக்கை அறையில் கிடந்த ஸ்மைலாவின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டாரம்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

பலத்த காயமடைந்த ஸ்மைலா திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர். மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற நகைகள், பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2.30 லட்சமாகும்.

மீனவர் வீடுபுகுந்து மனைவியைகத்தியால் குத்தி பணம், நகைகளை மர்மநபர்கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story