கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற இளம்பெண் விபத்தில் பலி
கொட்டாம்பட்டி அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
கொட்டாம்பட்டி அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
கணவருடன் சென்றார்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள வடகாடுபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் கார்த்திக் (வயது 30). இவர் மதுரையில் உள்ள தனியார் உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி(22). இவர்களுக்கு சர்வேஷ் என்ற 9 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில் கார்த்திக் நேற்று மனைவி, குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்துள்ளார்.
கொட்டாம்பட்டி அருகே கச்சராயன்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புவதற்காக திடீரென பிரேக் பிடித்து நிறுத்தி பின்னால் வேகமாக வந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற கார்த்திக் நிலைதடுமாறி காரின் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டதில் கார்த்திக், புவனேஸ்வரி படுகாயம் அடைந்தனர். கைக்குழந்தை சர்வேஷ் காயமின்றி தப்பியது.
டிரைவர் கைது
காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திக் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சுப்பிரமணி(32) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.