பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த வாலிபர் கைது


பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த வாலிபர் கைது
x

மயிலாடுதுறையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 25 பவுன் தங்கக்கட்டியை பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 25 பவுன் தங்கக்கட்டியை பறிமுதல் செய்தனர்.

பல்வேறு வழக்குகள்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூர் ராசாங்குளம் பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் சிவானந்தம் (வயது32). இவர் மேலையூர் பகுதியில் நடந்த கொலை வழக்கு மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தலச்சங்காடு பகுதியில் வீட்டில் புகுந்து 45 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிவானந்தத்தை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் தேடி வந்தனர்.

25 பவுன் தங்கக்கட்டி பறிமுதல்

இந்தநிலையில் நேற்று ராசாங்குளம் பகுதியில் உள்ள அவனது வீட்டில் சிவானந்தம் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்து, செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு இடங்களில் கொள்ளை அடித்த தங்க நகைகளை உருக்கி தங்கக்கட்டியாக மாற்றி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உருக்கி வைத்திருந்த 25 பவுன் தங்கக்கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சிவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story