உளுந்தூர்பேட்டை அருகே மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்த வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, உளுந்தூர்பேட்டைக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் வந்த மழவராயனூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் டேவிட் என்கிற தேவா(வயது 21) மாணவியை பார்த்து என்னை திரும்பி பார்க்க மாட்டாயா என கேட்டு, அவரது தலை முடியை பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட் என்கிற தேவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story