ஊட்டி அருகே மது விற்ற வாலிபர் கைது


ஊட்டி அருகே மது விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே மது விற்ற வாலிபர் கைது

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த நஞ்சநாடு பகுதியில் அட்டுமந்து பஸ் நிறுத்தம் முன்புறம் ஊட்டி புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஏராளமான மது பாட்டில்கள் இருந்தன. விசாரணையில் அவர் நஞ்சநாடு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 32) என்பதும், அந்த பகுதியில் மது விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணேசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story