ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்த வாலிபர் கைது


ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்த வாலிபர் கைது
x

ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

ஆந்திர மாநில பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் திம்மாம்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 34) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.


Next Story