குலசேகரன்பட்டினம் அருகே ஆடு திருடிய வாலிபர் கைது


குலசேகரன்பட்டினம் அருகே ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகே உள்ள அமராபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தன் கோனார் மகன் சுப்பிரமணியன் (வயது 32). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். மேலும் இவர் 100 ஆடுகள் வைத்து வளர்த்து, வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 11-ந் தேதி இரவு தனது ஆடுகளை அமராபுரம் வீட்டின் அருகே உள்ள கிடையில் அடைத்து விட்டு வந்தார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது பட்டியில் இருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 9 ஆடுகளை காணவில்லை.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசில், மணப்பாடு சுனாமி காலனியை சேர்ந்த அசோகன் மகன் ராயன் (25) மற்றும் பார்த்தால் அடையாளம் தெரியக்கூடிய 4 பேர் மீது புகார் அளித்தார்.

இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார். ஆடுகள் திருட்டு தொடர்பாக வீரபாண்டியன்பட்டினம் கிங் காலனியை சேர்ந்த முத்துச்செல்வம் மகன் சாரதி (21) என்பவரை கைது, 9 ஆடுகளையும் மீட்டார்


Next Story