கோவில்பட்டியில்மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது


கோவில்பட்டியில்மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில்மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி 2-வது செக்கடித் தெருவை சேர்ந்தவர் வாசுகி (வயது 68). பூக்கட்டும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் லிப்ட் கொடுப்பதாக கூறி, ஏற்றி சென்றுள்ளார். பின்னர் மூதாட்டி வைத்திருந்த பையில் இருந்த 3 கிராம் தங்க மோதிரம், ரூ.200-ஐ பறித்து கொண்டு வாலிபர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை, பணத்தை பறித்து சென்ற வடக்கு புதுக்கிராமம் 3-வது தெரு ராமசாமி மகன் மாரிமுத்து (வயது37) என்பவரை கைது செய்தனர்.


Next Story