மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி
திருமருகல் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
டிராக்டர் மோதியது
திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி ஆதினங்குடியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 20).இவர் சம்பவத்தன்று ஆதினங்குடியில் இருந்து வவ்வாலடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தெற்குலேரி அருகே சென்ற போது எதிரில் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவருக்கு வலைவீச்சு
இதுகுறித்த தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிஹரனின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் திருப்புகலூர் கட்டளைபுளியங்குடி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் கனகராஜன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர